இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 3,200 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாவில் இருந்து 2,000
ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சந்தைகளில் சில்லறை விலை 2,800 ரூபா முதல் 3,200 ரூபா வரை பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நேற்றையதினம் (14.10) தேசிக்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக
மத்திய வங்கி வெளியிட்டுள்ள விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.







