தங்கப் பதக்கத்தை வென்ற மன்னார் மாணவி

619
0
Spread the love

38 ஆவது தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்று மன்னார்-சென்-பத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் 1.56 மீற்றர் உயரம் வரை இந்த மாணவி பாய்ந்துள்ளார்.

இதன்மூலம் இதற்கு முன்னர் இருந்த 1.55 மீற்றர் உயரம் என்ற சாதனையையும்  முறியடித்து மாணவி பாடசாலைக்கு
பெருமை சேர்த்துள்ளார்.

பேசாலை பகுதியைச் சேர்ந்த W.வில்சியா என்ற மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

குறித்த மாணவியின் பயிற்றுவிப்பாளர் அதே பாடசாலையில் பணியாற்றும் அம்புரஸ் பெனட் குரூஸ் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here