ராகமயில் விபத்துக்குள்ளான பஸ் – 12 பேர் காயம்

148
0
Spread the love

ராகம, படுவத்தை பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையை சேர்ந்த சாரணர் குழுொன்று படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடந்த ஜம்போரி நிகழ்ச்சியிலில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் வீதியோர தடுப்பில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 20 மாணவர்கள் பயணித்துள்ளனர்.

ராகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here