கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபா குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று (23.10) மாத்திரம் 10,000 ரூபா குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (23.10) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 79,200 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்
தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







