கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07.11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற ‘பூகுடு கண்ணா’ என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
கார் ஒன்றில் வருகை தந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
கொலை செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







