இலங்கைக்கு நிவாரண உதவிகளை அறிவித்த மாலத்தீவு

148
0
Spread the love

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலத்தீவு நிவாரணங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, 50,000 அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 25,000 டுனா மீன் டின்னுகள் நன்கொடை மூலம் நிவாரண உதவி வழங்க மாலத்தீவு
அரசாங்கம் முன்வந்துள்ளது.

டிட்வா சூறாவளியால் இலங்கை பேரிடர்களை எதிர்கொண்டுள்ள நிலையில் மாலத்தீவு மக்களின் சார்பாக மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்க மாலத்தீவு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நெருங்கிய அண்டை நாடு மற்றும் நட்பு இலங்கை மக்களுடனான ஒற்றுமையின் நிரூபணம் என மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்கும் என மாலத்தீவு நம்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் அவர்களின் மக்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் நெருங்கிய பிணைப்புகளுக்கான ஆழமான அர்ப்பணிப்பை
இந்த நிவாரண உதவி பிரதிபலிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here