கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ் – 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

165
0
Spread the love

அனுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பஸ்ஸின் மேற்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட சுமார் 60 பயணிகள் இருந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏனையவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மீட்கப்பட்ட நபர்கள் நொச்சியாகம பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here