சீரற்ற வானிலை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

149
0
Spread the love

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை123 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கேகாலையில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நுவரெலியாவில் 06 உயிரிழப்பு சம்பவங்களும் குருநாகல் மாவட்டத்தில் 03 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை மொனராகலையில் 02 உயிரிழப்பு சம்பவங்களும் அநுராதபுரம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் தலா 01
உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

மேலும் சீரற்ற வானிலையால் 130 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட 13,690 குடும்பங்களைச் சேர்ந்த 43,925 பேர் 488 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here