இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (28.11) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிக்கும் நோக்கில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.







