பிரபல பாடகர் நவகம்புர கணேஷ் காலமானார்

165
0
Spread the love

அண்மைக் காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஷ் பாடல்கள் பாடுவது மட்டுமன்றி அதற்கான அபிநயம் செய்வதிலும் கைதேர்ந்தவர். அவர் இன்று இவ்வுலகுக்கு விடை கொடுத்து சென்றார். அக்கலைஞனுக்காக இயற்கையும் அழுது கொட்டி தீர்த்துவிட்டதாக “கண்ணகி கலாலயம்” தலைவர் A. K. இளங்கோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நவகம்புர கணேஷ்.. டோல் கணேஷ்..

மட்டக்குளியில கட்ட கவுன் பாட்டு கணேஷ் வடிவேல் கெட்டப்புல கலக்குற கணேஷ்…

இப்படி பல விதங்களில் ரசிகர்களும் சக கலைஞர்களும் அழைக்கும் கணேஷ்க்கு அண்மையில் இலங்கையில் கொழும்பு பிரதேச செயலக இலக்கிய விழாவில் அவரது கலை சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவித்திருந்தார்

அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here