உள்துறை அமைச்சின் பணியாளர்கள் போன்று நடித்து வீடு வீடாகச் செல்லும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களிடம் அமைச்சகத்தின் தலைப்பு கொண்ட ஆவணங்களும் கடிதங்களும் இருப்பதாகவும், “எதிர்கால பதிவுகளுக்காக ஒவ்வொருவரின் செல்லுபடியாகும் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும்” எனக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொழில்முறை தோற்றத்துடன் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.
யாராவது உங்கள் வீட்டுக்கு வந்து, *“ஒரு திட்டத்திற்காக உங்கள் புகைப்படம் / விரல் ரேகை எடுக்க வேண்டும்” என்று கூறலாம். அவர்களிடம் லாப்டாப்புகளும், பயோமெட்ரிக் சாதனங்களும், பெயர் பட்டியல்களும் இருக்கும். அவர்கள் அனைத்து தகவல்களையும் கேட்பார்கள்.
அரசாங்கத்தினால் இப்படியான திட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். இவை அனைத்தும் போலி. அவர்களுக்கு எந்தத் தகவலும் வழங்க வேண்டாம்.







