மதியம் 2 மணிக்குப் பின் மழை

136
0
Spread the love

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here