71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

74
0
Spread the love

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (6.12) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here