10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

26
0
Spread the love

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அமீரக அணி சார்பில் அந்த அணியின் தலைவர் மொஹமட் வசீம் அதிகபட்சமாக 66 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 15.2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய டிம் சீஃபர்ட் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும், ஃபின் ஆலன் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here