மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற் தொழில் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி 13 மற்றும் 17ஆம் திகதிகளில் வெடிபொருள் பாவித்து கொல்லப்பட்ட மீன்களை உடைமையில் வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் கரை வலைக்கு ரக்டர், வீஞ் பாவிப்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அதனை நிறுத்துமாறும் அந்தத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.







