நான்கு நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ றீச்சாவின் உணவுத் திருவிழா, எதிர்பாராத வகையில் பெருமளவிலான மக்கள் திரண்டதால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவில் திருப்தியடையாதவர்கள் அல்லது உணவைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், தங்களிடம் உள்ள பற்றுச்சீட்டு அல்லது டோக்கன் சீட்டை சமர்ப்பித்து பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் றீச்சா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரமாக சம்பவங்கள் தொடர்பான CCTV காட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள அவர், ஊழியர்களை அநாகரிகமாக நடத்துவதைத் தவிர்க்குமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.







