மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் (21.02) குடும்ப நல உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடமைக்கு சென்ற நேரத்தில் அவரிடமிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அறுக்கப்பட்டு அவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கையில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை பதாகைகளுடன் ஊர்வலமாக சென்ற குடும்ப நல உத்தியோகத்தர்கள்,
மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.







