பாக் – நியூசிலாந்து போட்டி , மழை குறுக்கிட்டது

137
0
Spread the love

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21.02) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் ‘சூப்பர் 8’  சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

குரூப் 2-வில் நடைபெறும் இத்தொடரின் 41-வது போட்டியான இதில்,  நாணய சுழற்சி வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நாணய சுழற்சியின் பின் சிறிது நேரத்திலேயே கொழும்பில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆடுகளம் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளது. இதனால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் தற்போது வரை தொடங்காமல் தாமதமாகியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரவு 8:10 மணி முதல் ஓவர்கள் குறைக்கப்படத் தொடங்கியுள்ளன. குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறுவதற்கான இறுதி நேரம் இரவு 10:16 மணி என நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here