எமது அரசியல் பெண்களுக்காகவே – பிரதமர்

104
0
Spread the love

இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here