ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் ஏவுகணைத் தாக்குதல்

94
0
Spread the love

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் (Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான ‘கிரீன் சோன்’ (Green Zone) பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள்ளிருந்து கரும்புகை வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் அல்லது அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here