லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தையை பரிஸில் நடத்த தயார்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

46
0
Spread the love

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பரிஸில் நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மேக்ரான், கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போது இஸ்ரேலுடன் “நேரடி பேச்சுவார்த்தைகளை” முன்னெடுக்க அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தத்தை ஆரம்பிக்கவும், நிரந்தர தீர்வை காணவும், லெபனானின் இறையாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக அந்நாட்டு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இடமளிக்கவும் இஸ்ரேல் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here