குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

66
0
Spread the love

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததனால், கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here