மீண்டும் படம் நடிக்க போகிறாரா விஜய்?

75
0
Spread the love

எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி வெளியாகவிருந்த திரைப்படம் ஜனநாயகன்.

தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகளும் இறுதிக் காட்சிகளும் இணையத்தளத்தில் வெளியாகின.

பின்னர் 3 மணிநேர முழு படமும் இணையத்தளத்தில் வெளியாகியது.

இந்த சம்பவம் படக்குழு, விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு ரஜினி, கமல், சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி என பல திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஜனநாயன் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திரைப்படத்தை நெல்சன், அட்லீ அல்லது லோகேஸ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here