இன்னும் 500 கோடி வசூலை எட்டாத ஜெயிலர் 2 – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன!

11
0
Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருவதாகத் தகவல்கள் வெளியானாலும், அப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் குறித்த புதிய விபரங்கள் வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதோடு, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபலங்களும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் இப்படம் ஏற்கனவே 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாகத் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வந்தன. இருப்பினும், இந்த வசூல் நிலவரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, அத்தகவல்களை மறுத்துள்ளார். நேற்றுவரை ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலக அளவில் சுமார் 470 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மாத்திரம் 122 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எவ்வாறாயினும், இன்னும் இரண்டு நாட்களில் அதாவது வார இறுதிக்குள் இப்படம் 500 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை அதிகாரப்பூர்வமாகத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here