ஜப்பானை தாக்கியது சுனாமி

43
0
Spread the love

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது.

இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை பதிவாகியுள்ளது.

இதற்கு முன், 70 சென்ரிமீற்றர் மற்றும் 40 சென்ரிமீற்றர் உயரம் கொண்ட சிறிய அலைகளும் சில துறைமுகங்களில் பதிவாகியுள்ளன.

மேலும், இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னனர் 03 மீற்றர் வரை உயரமுள்ள சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவாத்தே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மியாகி மற்றும் ஃபுகுஷிமா கடற்கரைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் 7.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானது.

பசிபிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலஅதிர்வு, ஜப்பானிய அளவுகோலில் ‘Upper 5’ ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கம் ஒரு அவசரகாலப் பணிக்குழுவை நியமித்துள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here