இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி, 200,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் கடந்த மாதம்19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுவிப்பதற்காக இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஒரு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்,
தப்பியோடிய மற்றைய உத்தியோகத்தர் நேற்று (04.05) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






