அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, 48 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ்
இயந்திரமொன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (21.12) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை என்பன உரிமைகளாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான தீர்மானங்களை இதற்கு முன்னமே எடுத்துள்ளது.
தேர்தல் கொள்கை அறிக்கைகளில் கூட இவற்றை காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டு அரசியலமைப்பில் பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதம் விவரிக்கப்பட்டுள்ளன.
அதன் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தாலும் சுகாதாரம், கல்வி, விவசாயம்,
மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகள் மட்டுமன்றி வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப்படவில்லை.
இவை அரசியலமைப்பின் 6 ஆம் அத்தியாயத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த 6 ஆம் அத்தியாயத்திலுள்ள உரிமைகளை பிரஜைகளால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது.
எனவே அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை உரிமைகளாக்கப்பட
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.







