பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவார் என ட்ரம்ப் தெரிவிப்பு

83
0
Spread the love

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியை இராஜினாமா செய்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மிகவும் முக்கியமான இரண்டு விடயங்களான குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய இரண்டு துறைகளில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துள்ளார் என்று ட்ரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்டார்மருக்குத் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டார்மரின் அமைச்சரவையில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் தொழிற்கட்சிக்குள் அவருக்குக் குறைந்து வரும் ஆதரவு ஆகியவற்றைக் காரணம் காட்டி, பிரித்தானிய பிரதமர் திங்கட்கிழமையன்றே இராஜினாமா செய்யக்கூடும் என்று அண்மையில் தகவல் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here