மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைச் செயலாளராக மொஹமட் சாஜித் நியமனம்

242
0
Spread the love

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான மொஹமட் சாஜித் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைச் செயலாளராக நேற்று (13.07) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது Clean Sri Lanka திட்டத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், விளையாட்டு அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்புகளை வகித்து வருகிறார்.

அத்துடன், இளம் வயதிலேயே மூன்று நாடுகளுக்குப் பயணம் செய்து பல்வேறு அனுபவங்களையும் பெற்றுள்ளார்.

அவரது புதிய நியமனத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here