நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு – வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, பலர் மாயம்

43
0
Spread the love

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கந்தகி ஆற்றில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பல வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சும்நுப்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, பின்னர் திடீரென நீர் பெருக்கெடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், வெள்ளத்துக்கான துல்லியமான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்த வெள்ளத்தினால் சுமார் 35 முதல் 40 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாகவும், பல பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டத்தின் கட்டுமானப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள இராணுவத்தினர் ஆறு பேரை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here