ஜனாதிபதி நிதியத்தின் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ருஹுணு பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

54
0
Spread the love

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (10) ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், கண்ணாடிச் சட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், செவிப்புலன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கண் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், கண்ணாடிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்கு Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

இத்திட்டத்தின் முதற்கட்டம் அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதுடன், அதன் மூலம் 600 மாணவர்கள் பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே,

ஜனாதிபதி நிதியத்தின் தலைவரான ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த, பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டம், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுடன், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் பங்களிக்கும் நடைமுறைச் செயற்பாடாக அமைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மஞ்சுளா யாபா, மாணவர் அலுவல்கள் பிரிவின் உதவிப் பதிவாளர் தனுஜா தமயந்தி, பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் Wish மன்றத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here