விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக இலங்கை அரசுடன் இணைந்து நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்க கொரிய தன்னார்வ அமைப்பு திட்டம்!

40
0
Spread the love

நாட்டிற்குச் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான கொரிய தன்னார்வ அமைப்பின் தலைவர் Deokuju Jung தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, இலங்கையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் நலன்புரித் திட்டங்கள் மற்றும் அவற்றைச் செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் உதவிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்துடன் இணைந்து பரந்தளவிலான திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பில், நாமல் உயனவின் நிறுவுநரும் நாமல் உயன ஆரண்ய சேனாசனத்தின் தலைவருமான வனவாசி ராஹுல தேரர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், கொரிய தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகளான Jungsun Choi, Junyoon Lim, Chaeeun Kim மற்றும் Wonwook Choi ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here