தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு

55
0
Spread the love

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(12.06) வியாழக்கிழமை நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளைத் தவிர்த்து அதனைச் சூழ உள்ள காணிகளை மாவட்ட செயலாளரிடம் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவற்றை மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர் ஊடாக உரியவர்களிடம் கையளிப்பார் எனவும் இதன் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு அவர்களின் காணியின் பெறுமதிக்குரிய தொகையை நஷ்ட ஈடாக வழங்குவதாகவும் அல்லது வேறு காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த விகாரைப் பிரச்சினையை தொடர்ந்து செல்ல அனுமதிக்காமல் ஒரு மாத காலத்திற்குள் முடிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here