யாழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசு – மோட்டார் சைக்கிள் பதிவு சேவை நாளை முதல் ஆரம்பம்!

33
0
Spread the love

யாழ்ப்பாண மாவட்டப் பகுதி மக்களுக்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சேவை ஒன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் போக்குவரத்து மற்றும் ஆவணப் பணிகள் மேலும் எளிமையாக்கப்படவுள்ளன.

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்கான விசேட சேவையானது, நாளைய தினம் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவின் ஊடாகச் செயற்படுத்தப்படவுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் நேரடி அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சார்பில் பிரத்தியேகமான புதிய கருமபீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம், யாழ்ப்பாணப் பகுதி மக்கள் தங்களது புதிய மோட்டார் சைக்கிள் பதிவுகளை மேற்கொள்ள வேறு மாவட்டங்களுக்கு அலைந்து திரிவது தவிர்க்கப்படுவதுடன், நேரமும் பணமும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதி வாகன உரிமையாளர்கள் அனைவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here