போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்குக் கடுமையான தண்டனை

65
0
Spread the love

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டும் இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வீதிச் சமிக்ஞைகளை மீறுதல் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய நாடு முழுவதும் சிறப்பு பொலிஸ் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இத்தகைய வீதி விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராகத் தராதரமின்றி அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்த நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனயீனமாக வாகனங்களைச் செலுத்தும் நபர்களுக்கு எதிராகச் சிறைத்தண்டனை வரை கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிஸார் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, அனைத்து வாகனச் சாரதிகளும் போக்குவரத்து விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பாதுகாப்பாகப் பயணங்களை மேற்கூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here