இலங்கையில் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு

80
0
Spread the love

இலங்கை முழுவதும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு திட்டமிட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (ஒக்டோபர் 19), நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் மின்சார விநியோகத்தைச் சீராக நிர்வகிப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக நாடு நான்கு வலயங்களாகப் பிரிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வலயத்திலும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி அனுமதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர், எந்தெந்த வலயங்களில் எந்த நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற விரிவான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பைத் தொடர்ந்து, மின்சார விநியோகத்தை நிலையாகப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய மின்வெட்டு அட்டவணை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பொதுமக்கள் அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here