நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

51
0
Spread the love

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் கோளாறு காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சூழ்நிலை தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (20) மாலை முதல் இந்தச் சீரற்ற காலநிலை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாய் வட மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணிப்பிட்டுள்ளது. அதேவேளை, காலை வேளையில் வட மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கப் பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here