திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை

20
0
Spread the love

திருகோணமலை, நான்காம் கட்டை சந்தி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை, சிங்கபுரப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவுக் காலகட்டத்தில் அவர் தங்கியிருந்த விடுதியில் தனியாக இருந்த வேளையில், அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது கும்பலொன்று இக்கொலைச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இக்கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள திருகோணமலைப் பொலிஸார், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here