நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள் மற்றும் சில பிரதான உணவுப் பொருட்களின் விலைகளில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்த விலை மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதற்கமைய, உணவகங்களில் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகள் மற்றும் மாவுப் பொருட்களின் விலைகளில் சிறு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் எரிபொருள், மின்கட்டணச் சுமை காரணமாக இந்த விலை மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







