யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

19
0
Spread the love

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் கடந்த கால மோதல் சூழலின் போது அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், வைத்தியசாலையில் கடமையாற்றிய மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களும் பரிதாபமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற அனுஷ்டிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here