நுரைச்சோலை மின் உற்பத்தி விரைவில் தொடக்கம்

46
0
Spread the love

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் சுழற்சி முறை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், நாளை முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதன் மூலம் மின்வெட்டுக்கான தேவை முற்றிலுமாக நீங்கும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here