பொதுமக்களுக்கு ஒரு சட்டம் அரசியல் தலைவர்களுக்கு வேறு சட்டமா – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி!

62
0
Spread the love

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமானது சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், அரசியல் தலைவர்களுக்கு வேறு விதமாகவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எவ்வித சாட்சியங்களும் இன்றித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குறித்த சிலையை வைப்பதற்காக அனுமதி கோரிய யாழ். மாநகர சபை முதல்வர் மதிவதனி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் பொன்னம்பலம் மற்றும் சிறிதரன் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறும் அரசாங்கம் இந்த விவகாரத்தில் பாரபட்சமாக நடப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என இருவேறு தரப்பினருக்கும் நீதி வழங்கும் முறையில் காணப்படும் இந்த வேறுபாடுகள் குறித்து நாட்டின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here