யாழில் 22 நாட்களாக இளம் பெண் மாயம்

41
0
Spread the love

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடி அவரது தாயார் அலைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளம் பெண் இறுதியாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் காணப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் மகள் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு 22 நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளுக்கு என்ன நேர்ந்தது, அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் தவித்து வருவதாகவும், மகள் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் உரிய விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here