யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த மீன்கள் விற்பனை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

13
0
Spread the love

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் பொதுமக்களுக்குப் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, அங்கு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த அதிரடிச் சோதனையின் போது, அப்பகுதியில் உள்ள நான்கு வியாபாரிகளிடமிருந்து சுமார் 30 கிலோகிராம் வரையான பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் உடல்நலத்திற்குத் தீங்க விளைவிக்கும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குறித்த கெட்டுப்போன மீன் வகைகள் அனைத்தும் உடனடியாகக் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. எனவே, நுகர்வோர் மீன்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரத்தினைக் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here