யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (17.06) பிற்பகல், வீட்டினில் யாரும் இல்லாத சமயம்
குறித்த சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது அமர்ந்து விளையாடியபோது வலை அறுந்து சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.







