சென்னை விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த 48 வயது தாயும் 21 வயது மகளும் உள்நாட்டு முகவரி கொண்ட போலி இந்தியக் கடவுச்சீட்டுகளுடன் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியேற்ற அதிகாரிகளின் சோதனையின்போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட
விசாரணையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும், இந்திய கடவுச்சீட்டினைப் பெறுவதற்குப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இரு பெண்களும் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்
பட்டுள்ள நிலையில் போலி கடவுச் சீட்டினை ஏற்பாடு செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







