கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை (19.06) வடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துச் சம்பிரதாயபூர்வமாக கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலில்,
கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.










