அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் காலமானார்

35
0
Spread the love

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்.

வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட ஆபத்துகள் மற்றும் எதிர்கால அரசியல் அபாயங்கள் குறித்து முன்கூட்டியே சிந்தித்து எச்சரித்து வந்த சிந்தனையாளராக அவர் விளங்கினார்.

ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின்னர் சட்டத்தரணியாகவும் பணியாற்றிய அவர், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டும் வகையில் தனது பொதுப்பணியை முன்னெடுத்தார்.

தமிழ்த் தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்காகச் செயற்பட்ட அவர், புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்குகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சிக்கலான விடயங்களைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தனது எழுத்துக்கள் மற்றும் கருத்துரைகள் மூலம் தெளிவுபடுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here