அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக வருடாந்தம் 900 பில்லியன் ரூபாய் செலவு

36
0
Spread the love

அரச ஊழியர்களின் சம்பள வழங்கலுக்காக மாத்திரம் தற்போது வருடமொன்றுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கீழ் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்தே இந்தச் செலவுகள் ஈடு செய்யப்படுவதால், அரச ஊழியர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here