நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் வரியல்லாத வருமானம் 314.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 39.1 சதவீத வளர்ச்சியாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், வட்டி வருமானம், அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் லாபப் பகிர்வுகள் அதிகரித்தமையே இந்த வரியல்லாத வருமான வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.







